1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 30 மே 2016 (16:55 IST)

அப்பப்பா.. எப்பப்பா...எண்ணுவீங்க? அலறும் திமுக வேட்பாளர் அப்பாவு

அப்பப்பா.. எப்பப்பா...எண்ணுவீங்க? அலறும் திமுக வேட்பாளர் அப்பாவு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என திமுக வேட்பாளர் அப்பாவு தேர்தல் ஆணையத்திற்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில், அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கு அடுத்த வந்த திமுக வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகள் மட்டுமே பெற்றார். வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு தோல்வி அடைந்தார்.
 
ஆனால், ராதாபுரம் தொகுதியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணவில்லை. எனவே, அதையும் சேர்த்து, மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என அப்பாவு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார். அதே போல, இந்த கோரிக்கை குறித்து தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். ஆனால், தேர்தல் ஆணையம் மவுனம் காத்து வந்தது.
 
இது குறித்து திமுக வேட்பாளர் அப்பாவு கூறுகையில், இராதாபுரம் தொகுதியில் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இதற்கு தேவையான ஆவணங்களை தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டுள்ளேன். மேலும், இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளேன். எனது மனு மீது நடவடிக்கை எடுப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார் என்றார்.