Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்றைய அப்பல்லோ கதையின் இயக்குநர் யார்? திமுக எம்.எல்.ஏ கேள்வி


Abimukatheesh| Last Updated: திங்கள், 6 பிப்ரவரி 2017 (15:07 IST)
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவன் நடராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதில் சந்தேகம் இருப்பதாக எம்.எல்.ஏ. அன்பழகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 


அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதல்வராக அறிவிக்கப்பட்டது, நடராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, அப்பல்லோ மருத்துவமனை செய்தியாளர் சந்திப்புக்கு அறிவிப்பு வெளியிட்டது என அனைத்து ஒரே நாளில் அடுத்தடுத்து நடைப்பெற்றத்தில் சந்தேகம் உள்ளது என திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,

மதியம் 3 மணிக்கு சசிகலா அடுத்த தமிழக முதல்வராக அறிவிக்கப்படுகிறார். இரவு 7 மணிக்கு நடராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகிறார். இரவு 9 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனை செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டது.

இன்றைய அப்பல்லோ கதையின் இயக்குநர் யார்?

இவ்வாறு அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இன்னும் சில நாட்களில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கணவன் நடராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதன் பின்னர், அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரீச்சர் பீலேவுடன் செய்தியாளர்கள் சந்திப்பு நாளை பிறபகல் நடைப்பெறும் என்ற அறிவிப்பை வெளியிடுகிறார்.

இதில் தான் சந்தேகம் உள்ளதாக திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :