வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (10:23 IST)

’அதிர்ச்சி தகவல்’ - தேர்தல் செலவுக்காக வீடு புகுந்து கொள்ளையடித்த தே.மு.தி.க கவுன்சிலர் கணவன்

’அதிர்ச்சி தகவல்’ - தேர்தல் செலவுக்காக வீடு புகுந்து கொள்ளையடித்த தே.மு.தி.க கவுன்சிலர் கணவன்

சென்னை, ஆழ்வார் திருநகர் விரிவுப்பகுதியை சேர்ந்த குமாரதேவன் என்பவரின் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு, மாநகராட்சி அதிகாரி என்று கூறிக்கொண்டு ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வந்து, அவரிடம் வரி கட்டியதற்கான ரசீதுகளை காண்பிக்கக் கூறி இருக்கின்றனர்.


 


குமாரதேவனின் ரசீதுகளை பார்த்த பின், அனைத்தும் சரியாக இருக்கிறது என்று கிளம்பினர். இதன் பிறகு, இரண்டு நாட்கள் கழித்து குமாரதேவன் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 45 பவுன் நகையும், ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் பணமும் காணவில்லை. குமாரதேவன் கொடுத்த புகாரின் பேரில், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த காவல்துறையினர், குமாரதேவன் வீட்டிற்கு வந்து போன திருடர்களை அடையாளம் கண்டனர். பின்னர், விருகம்பாக்கத்தில் நடைபெற்ற வாகன சோதனையில், குமாரதேவன் வீட்டில் கொள்ளையடித்த, முக்கிய திருடன் காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டான். அவன் பெயர் கனேசன் என தெரிய வந்தது.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கணேசன் கூறியதாவது. “நான் தே.மு.தி.கவில் முன்னாள் உறுப்பினர். எனது மனைவி சுவீதா பேரணாம்பட்டு தே.மு.தி.க ஒன்றிய கவுன்சிலர். மனைவியை மீண்டும் உள்ளாட்சி தேர்தலில் நிற்க வைப்பதற்காக பணம் தேவைபட்டது. அதற்காக இந்த குறுக்கு வழியை தேர்வு செய்தேன்” என கூறியுள்ளார்.

மேலும், காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரனையில், கணேசன் மீது பல கொள்ளை வழக்குகள்  இருப்பதும், அவருக்கும் அவரது மனைவிக்கும், மூன்றடுக்கு சொகுசு குடியிருப்புகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், குமாரதேவன் வீட்டில் நடந்த கொள்ளையில், வேலூர் மாவட்டம், ஆம்பூர், சுத்திப்பட்டியை சேர்ந்த காந்திராஜன் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து, அவர்களும் கைது செய்யப்பட்டனர்.