1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 28 மே 2016 (13:45 IST)

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் களம் இறங்குகிறார் விஜயகாந்த்?

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


 
 
திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சீனிவேல் இவர் கடந்த 25-ஆம் தேதி சட்டசபை உறுப்பினராக பதவியேற்கும் முன்னரே உடல்நல குறைவால் மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.
 
இந்த இடைத்தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன் இந்த தொகுதியில் போட்டியிடலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.
 
உளுந்தூர்பேட்டையில் டெபாசிட் வாங்க முடியாமல் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட விஜயகாந்த், இடைத்தேர்தலில் களம் இறங்கி ஆளுங்கட்சியை எதிர்த்து வெற்றிபெறுவது கொஞ்சம் இல்லை ரொம்ப கடினமே.