வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 4 நவம்பர் 2015 (00:57 IST)

தீபாவளி பண்டிகைக்கு 11,959 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11,959 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

 
தீபாவளி பண்டியை நவம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பொது மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சுமார் 11 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் நவம்பர் 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை இயக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
அதே போன்று, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வகையில்  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.