Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படம்: இயக்குநருக்கு கொலை மிரட்டல்


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (12:34 IST)
மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப் போவதாக அறிவித்த இயக்குநருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறதாம்.

 


மெயின் ஹூன் ரஜினிகாந்த் என்ற திரைப்படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பைசல் சைஃப். இந்த படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப் போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

என்னுடைய திரைப்படத்தை எதிர்த்து,பல கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.ஆனால் என்னுடைய படத்தை பார்க்காமலேயே, அதனை இவர்கள் எதிர்ப்பதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது. இந்த படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்தது அல்ல.

இந்த படத்துடன் ஜெயலலிதாவுக்கு தொடர்பிருக்கும் ஒரே வார்த்தை படத்தின் டைட்டிலான ‘அம்மா’ என்பது மட்டுமே. நடப்பதை பார்க்கும் போது, இந்த படத்தை எடுக்க முடியுமா? என்பதே சந்தேகமாக உள்ளது, என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :