வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2016 (20:51 IST)

மோடியை பாராட்டும் ரஜினி கபாலி படத்தின் வசூல் பற்றி பேசுவாரா? - அமீர் கேள்வி

மோடியை பாராட்டும் ரஜினி கபாலி படத்தின் வசூல் பற்றி பேசுவாரா? - அமீர் கேள்வி

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி, கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். அதற்கு பல்வே எதிர்ப்பு வந்தாலும், ஒரு பக்கம் பாராட்டும் குவிந்தது.


 

 
நடிகர் ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் “புதிய இந்தியா பிறந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு மோடி பதிலும் கூறினார்.
 
இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான அமீர், இதுபற்றி கருத்து தெரிவித்த போது, ‘நாட்டில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் கருத்து கூறாத ரஜினிகாந்த், இதற்கு மட்டும் கருத்துக் கூறியது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும், மோடிக்கு பாராட்டு தெரிவிக்கும் ரஜினி, கபாலி படத்தின் மொத்த வசூல் என்ன என்பது பற்றி வெளிப்படையாக கூறுவாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஏற்கனவே, ரஜினியின் இந்த கருத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.