Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ. இருந்து ஆளுநர் ஆய்வு செஞ்சாலும் தப்பில்லை : டேக் இட் ஈஸி திண்டுக்கல் சீனிவாசன்


Murugan| Last Modified வியாழன், 16 நவம்பர் 2017 (11:34 IST)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மாட்டத்தில் திடீர் ஆய்வு செய்த விவகாரம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன் தினம் கோவை மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மாவட்ட நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆளுநர் விதிகளை மீறி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துள்ளார் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். 
 
அதேபோல், அதிகார வரம்பை மீறி ஆளுநர் செயல்படுகிறார் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
ஒருபக்கம் அதில் தவறு இல்லை ஏதும் இல்லை என பாஜக நிர்வாகிகளும், அதிமுக அமைச்சர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்படி இருந்தாலும், ஆளுநரின் இந்த நடவடிக்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அரசை பாராட்டவே தான் ஆய்வு செய்ததாக ஆளுநர் தனது உரையில் தெரிவிதுள்ளார்.
 
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “ஆளுநர் ஆய்வு செய்ததை டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் அவர் ஆய்வு நடத்தினாலும் அது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ஆளுநர் ஆய்வு செய்திருந்தாலும் அது தவறில்லை” என தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :