Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அச்சத்தில் திண்டுக்கல் லியோனி: ஒரே நாளில் 500 முறை கொலை மிரட்டல்!

அச்சத்தில் திண்டுக்கல் லியோனி: ஒரே நாளில் 500 முறை கொலை மிரட்டல்!


Caston| Last Modified வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (09:39 IST)
திமுகவை சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனிக்கு நேற்று ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட முறை கொலை மிரட்டல் வந்துள்ளது. பாமகவை சேர்ந்தவர்கள் இந்த மிரட்டல் கொடுத்ததாகவும் இதனால் அதிர்ந்து போன அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

 
 
பாமகவின் காடுவெட்டி குரு பிறந்தநாள் வரப்போவதாகவும், அவரை திண்டுக்கல் லியோனி அவரது பட்டிமன்றங்களில் தவறாக பேசிவிட்டதாக கூறி இந்த மிரட்டல்கள் அவருக்கு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தான் காடுவெட்டி குருவை பற்றியோ, பாமகவை பற்றியோ பட்டிமன்றங்களில் எதுவும் பேசவில்லை என லியோனி மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
நேற்று நடிகரும், எம்எல்ஏவுமான வாகை சந்திரசேகர் இல்ல திருமண விழாவில் லியோனி கலந்துகொண்டார். அப்போது அவரது செல்போனிற்கு பாமகவினர் 500-க்கும் மேற்பட்ட முறை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
 
இதனை அவர் திமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டு போக, அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திண்டுக்கல் டிஎஸ்பியிடம் புகார் ஒன்றை அளித்தார். பின்னர் பேசிய லியோனி தான் பாமகவின் ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குறித்து எதுவும் பட்டிமன்றங்களில் பேசவில்லை என விளக்கமளித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :