Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினகரன் ஆதரவாளர்களுக்கு பதவி: பணிந்தாரா எடப்பாடி?

தினகரன் ஆதரவாளர்களுக்கு பதவி: பணிந்தாரா எடப்பாடி?

Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (10:04 IST)

Widgets Magazine

தினகரன் ஆதரவாளர்கள் மூன்று பேருக்கு சட்டசபை மாற்று அல்லது பொறுப்பு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


 
 
அதிமுகவில் தினகரனுக்கு எதிராக ஒரு அணி உருவாகி 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நேற்று கூடியது. கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
 
நேற்றைய கூட்டத்தில் எம்எல்ஏ சரவணன் கூவத்தூர் பேரம் தொடர்பாக பேசிய வீடியோ விவகாரம் புயலை கிளப்பியது. அதன் பின்னர் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சட்டசபை சபாநாயகர் தனபால் சட்டப்பேரவையில் மாற்றுத் தலைவர்கள் குறித்து தெரிவித்ததார்.
 
அதாவது சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் சட்டசபைக்கு வர முடியாத சூழ்நிலையில் பேரவையை நடத்துவதற்கான மாற்றுத் தலைவர்கள் யார் யாரென அறிவித்தார். இது வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறை தான்.
 
சட்டப்பேரவை மாற்றுத் தலைவர்களாக சு.ரவி, பி.எம்.நரசிம்மன், பி.வெற்றிவேல், எஸ்.குணசேகரன், வி.வி.ராஜன் செல்லப்பா, மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் செயல்படுவார்கள் என சபாநாயகர் தெரிவித்தார்.
 
இந்த ஆறு பேரில் வெற்றிவேல், தங்கதமிழ்ச் செல்வன், ராஜன் செல்லப்பா, நரசிம்மன் ஆகிய நான்கு பேரும் தினகரன் ஆதரவாளர்கள். இதனையடுத்து தினகரனின் நெருக்கடிக்கு அடிபணிந்து தான் எடப்பாடி பழனிச்சாமி அவரது ஆதரவாளர்களுக்கு பதவி வழங்கியுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

10வது மாடியில் இருந்து குழந்தையை தூக்கி எறிந்த தாய்: லண்டன் தீவிபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

நேற்று அதிகாலை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 24 அடுக்குகள் கொண்ட 'கிரென்ஃபெல் டவரில்' ...

news

நான் செய்ய முடியாது! நீங்கதான் செய்யணும்: அடம்பிடிக்கும் மம்தா பானர்ஜி

தமிழகம் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற ...

news

மொய் எழுதுவதிலும் புகுந்தது டெக்னாலஜி: மொய்டெக் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

இன்றைய உலகில் டெக்னாலஜி இல்லாமல் எதுவுமே நடக்காது. மனித வாழ்க்கையே டெக்னாலஜி ஆகிவிட்ட ...

news

போட்டோ எடுத்தால் கைநிறைய பரிசு: உபி முதல்வரின் அடுத்த அதிரடி

கடந்த சில வருடங்களாக மொபைல் போனின் ஆதிக்கம் அதிகரித்ததில் இருந்து கர்ணனின் கவசகுண்டம் போல ...

Widgets Magazine Widgets Magazine