Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆட்சி உங்களுக்கு ; கட்சி தினகரனுக்கு - எடப்பாடியிடம் டீல் பேசும் எம்.எல்.ஏக்கள்


Murugan| Last Modified வியாழன், 15 ஜூன் 2017 (15:25 IST)
தமிழக அரசியலின் பரபரப்பான சூழ்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச உள்ளனர்.

 

 
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட தினகரன், சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதன் பின் அவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் 34 பேர் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், இன்று மாலை அந்த 34 எம்.எல்.ஏக்களும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் சந்திக்க உள்ளனர். அப்போது, தினகரனின் அரசியல் மற்றும் கட்சி செயல்பாடுகளுக்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது, ஆட்சியை மட்டும் அமைச்சர்கள் பார்க்கட்டும், கட்சியை தினகரன் பார்த்துக்கொள்வார் என அவர்கள் முதல்வரிடம் வலியுறுத்துவார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :