Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மோடி தினகரனை முதல்வர் ஆக்கியே தீருவார்

modi
bala| Last Modified வெள்ளி, 10 நவம்பர் 2017 (14:46 IST)
தினகரன் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்

இந்திய வருமான வரித்துறை வரலாற்றிலே மிக அதிகமான இடங்களில் (190) அதிகமான அதிகாரிகளால் (1800) நடத்தப்பட்டு வரும் வருமான வரித்துறை ரெய்டு .இந்த ரெய்டு சசிகலா சார்ந்து, தினகரனைக் குறி வைத்து நடத்தப்பட்ட ஒன்று. தினகரன் இதை அல்லாக்க தூக்கி போட்டு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் ஸ்கோர் செய்து இருக்கிறார். அவரது பேட்டி இதை நிரூபித்து இருக்கிறது.   

   
பிஜேபி க்கு ஆல்வா பார்சல் !

ஸ்கோர் 1 : தினகரன் வருமான வரித்துறை ரெய்டுவின் போது மாட்டுக்கு பழம் கொடுத்தாரா ? இல்லையா ? என தெரியவில்லை. ஆனால் நடிகர் மயில்சாமி சொன்னதுபோல பிஜேபிக்கு ஆல்வா கொடுத்து இருக்கிறார். பிஜேபி அ தி மு க வை அழித்து தன்னை ஆளுமை செய்வதை, கொள்ளிக்கட்டையை எடுத்து தன் தலையை தானே சொறிவதற்கு சமம் என்கிறார்.

மத சார்பின்மையின் புதிய நாயகன்

ஸ்கோர் 2 : மெர்சல் படத்திற்கு தமிழக பிஜேபி எப்படி வெளிச்ச விளம்பரம் செய்ததோ ? அதைப்போல தினகரனுக்கு பிஜேபி வருமான வரித்துறை மூலம் வெளிச்ச விளம்பரம் செய்து வருகிறது. இன்றைய சூழலில் தமிழகத்தில் யார் பிஜேபியை வசவு பாடுகிறார்களோ ? எதிர்கிறார்களோ ? அவர்கள் எல்லாம் மத சார்பின்மையின் நாயகன்களே. தலித்துகள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள், கம்யூனிஸ்ட்கள் என அனைவரது பார்வைகளும் மத சார்பின்மையின் பால்  தினகரனை நோக்கி திருப்பி இருக்கிறது.    

பயமா எனக்கா - தினகரன் ஸ்டைல்

ஸ்கோர் 3 : பயமா ? எனக்கா ?
ஜெய்லா ? நான் திகார் ஜெயிலே பார்த்தவனாக்கும் ?
போயா ! மோடி ஜி ஆண்டவனே நம்ம பக்கம் !
என்ன 20 வருஷம் ஜெயில் தருவார்களா ? பின்னாடி வருவோம்ல ! பாத்துக்கலாம் !
ஜெயில் இருந்தும் தன்னால் கட்சி நடத்த முடியும் என மோடிக்கே சவால் விடுகிறார்.

குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் தேர்தல்கள் போது அடக்கி வாசித்த தினகாரனா இது ?  ஜி ஸ் டி, பண மதிப்பு நீக்கம் எல்லாம் மக்கள் விரோதமானது என்கிறார். புதிய எழுச்சி தான்.  


தினகரனே அ தி மு க; அ தி மு க வே தினகரன்  

 


ஸ்கோர் 4 : தேர்தல் கமிஷனில் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது, இந்த ரெய்டு முக்கியத்துவம் பெறுகிறது.

ஒபிஎஸ், ஈ பி எஸ், எல்லாம் இப்பதான் அப்பு ! மோடி அப்பு !
நாங்க எல்லாம் ஜேப்பியார் காலத்து ஆளு அப்பு!
ஜானகி அம்மையார் எல்லாம் பாத்து வந்தவுக்கா அப்பு மோடி அப்பு !
ஒபிஎஸ் ஈ பி எஸ் மற்றும் நமது அமைச்சர்கள் எல்லாம் அதிகாரம் இழப்பார்களே ஆனால் ஒரு வேலைக்கும் ஆக மாட்டார்கள். அவர்களால் ஒரு கொன்சிலர் சீட் கூட ஜெயிக்க முடியாது. இது தெரியாமல் என்ன அப்பு ! மோடி அப்பு ! உனக்கு அப்பு பே !


இரா காஜா பந்தா நவாஸ்
Sumai244@gmail.com


இதில் மேலும் படிக்கவும் :