1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (15:59 IST)

தினகரன் பக்கம் சாய்ந்த சரத்குமார்?; வேட்பு மனு தள்ளுபடி - பின்னணி என்ன?

ஆர்.கே.நகர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு பின்னால் சரத்குமார் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், நடிகர் சரத்குமார் தலைவராக உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் அந்தோணி சேவியர் என்பவர் களம் இறக்கப்பட்டார். 
 
ஆனால், வேட்பு மனுக்களை சரிபார்க்கும் பணி நடைபெற்ற போது,   அந்தோணி சேவியரின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். அதோடு, அவருக்கான மாற்று வேட்பாளரின் மனுவையும் அதிகாரிகள் நிராகரித்தனர். இதுபற்றி பொதுவெளியில் சரத்குமார் எந்த கருத்தோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். 
 
ஆர்.கே.நகர் தொகுதியில் நாடார் சமூகத்தினர் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்களின் வாக்குகளை பெற தினகரன், ஓபிஎஸ் மற்றும் திமுக தரப்பு ஏற்கனவே வியூகம் வகுத்து வருகிறது. எனவே, சரத்குமார் வேட்பாளர் அந்த ஓட்டுகளை பெற்று விடக்கூடாது என கணக்கு போட்ட தினகரன், சரத்குமாரிடம் பேரம்  பேசியதாகவும், அதன் விளைவாகவே அந்தோணியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதகாவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
ஏனெனில், அந்த மனுவில் தவறு எனில், மாற்று வேட்பாளரின் மனுவையாவது தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்றிருக்க வேண்டும். ஆனால், அதையும் சேர்த்து நிராகரித்து விட்டனர். எனவே, இதற்கு பின்னால் சரத்குமாரும், அவருக்கு பின்னால் தினகரனும் இருப்பதாக கூறப்படுகிறது.