Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டிடிவி தினகரன் ஒரு 420: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு!

டிடிவி தினகரன் ஒரு 420: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் தாக்கு!


Caston| Last Modified வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (14:53 IST)
அதிமுகவில் கடந்த இரண்டு தினங்களாக டிடிவி தினகரன் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. ஓவ்வொருவரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 
 
அணிகள் இணைப்பில் தீவிரமாக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராக பல தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக சசிகலாவின் நியமனங்கள் எதுவும் செல்லாது எனவும், டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளர் இல்லை எனவும் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.
 
இதனை கண்டித்து தினகரன் நேற்று தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது பேசிய அவர் பிரமாண பத்திரத்தில் ஒரு மாதிரியாகவும், தற்போது ஒரு மாதிரியாகவும் பேசும் எதிர் அணியினரை என விமர்சித்தார். குறிப்பாக யாரை அவர் 420 என கூறினார் என செய்தியாளர்கள் திரும்ப திரும்ப கேள்வி எழுப்பியும் அவர் நேரடியாக முதல்வரா, மற்ற அமைச்சர்களா என்பதை தெளிவு படுத்தாமல் மொத்தமாக 420 என மழுப்பலாக பதில் அளித்தார்.
 
இதனையடுத்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் தினகரன் 420 என கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தினகரன் 420 என கூறியது அவருக்கே பொருந்தும் என்றார். மேலும் கடந்த மூன்று மாதங்களாக நடக்கும் நிகழ்வுகளை வைத்து பார்த்தால் 420 என்பது அவருக்கே பொருந்தும் என்றார் அதிரடியாக.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :