வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (11:35 IST)

சுவாதி கொலை பற்றி தகவல் வெளியிட்ட திலீபன் மகேந்திரன் கைது

திலீபன் மகேந்திரன் மீண்டும் கைது

சென்னை நுங்கம்பக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்குபற்றி அவதூறான செய்திகள் பரப்புவதாக குற்றம் சுமத்தப்பட்டு திலீபன் மகேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
போராளி என்று கூறிக்கொண்டு சமூக வலைத்தளத்தில் உலவி வருபவர் திலீப் மகேந்திரன். சில மாதங்களுக்கு முன்பு தேசியை கொடியை எரித்து, அதன் புகைப்படங்களை வெளியிட்டார். அதனால் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
அதன்பின் ஜாமீனில் வெளிவந்த மகேந்திரன், சுவாதி கொலை வழக்கு பற்றி பல திடுக்கிடும் தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். 
 
எனவே இவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்
 
இதுபற்றி தமிழச்சி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்த போது “ தோழர் திலீபன் மகேந்திரன் சற்றுமுன் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
"சுவாதி படுகொலை தொடர்பான தகவல்களை அவர்தான் எனக்கு கொடுத்துக் கொண்டிருக்கக் கூடும்" என்று கருப்பு முருகானந்தம் என்ற சமூக விரோதி கொடுத்த புகார் அடிப்படையில் தோழர் திலீபன் மகேந்திரன் கடும் விசாரணைக்குள் இருக்கிறார்.
 
வலியோர்களுக்கு ஏவலாளிகளாய் இருப்பதும், எளியோரை வதைப்பதும்தான் தமிழக காவல்துறையினரின் மக்கள் பணியா?
 
ஆதாரம் எங்கிருந்து வருகிறது என்று என் மீது புகார் கொடுத்து விசாரிக்கும் துணிச்சல் இல்லாத தமிழக காவல்துறை தோழர் திலீபன் மகேந்திரனை போட்டு தாக்குவது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.