Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

யார் சமூக விரோதி என்று காவல் துறைக்கு தெரியாதா? - விஜயகாந்த் கேள்வி

Last Modified: திங்கள், 30 ஜனவரி 2017 (19:22 IST)

Widgets Magazine

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதியான முறையில் போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்தது. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தினர்.


 

பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கினர்.

காவல் துறையினரின் திடீா் தடியடி சம்பவத்தால், சென்னையின் சில இடங்களில் அசாம்பாவிதங்கள் நடைபெற்றன. நடுக்குப்பத்தின் சில பகுதிகளில் வாகனங்கள், கடைகள் தீக்கிரையாகின.

இந்நிலையில், சென்னை நடுக்குப்பத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ”பொத்தாம் பொதுவாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சமூக விரோதிகளை காவல்துறையினர் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலவரத்தில் யார் தீவரவாதி, யார் சமூக விரோதி என்று காவல் துறைக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரியாதா? ஒட்டுமொத்தமாக கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இந்த கலவரம் குறித்து முழுமையான விசாரணையா நடக்கபோகிறது? இதையும் தமிழக அரசு மூடிமறைக்கதான் போகிறது. என்றார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

கழிவு நீரை தெருக்களில் விட்டால் ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை தெருக்களில் கழிவு நீரை விட்டால் ரூ.1 லட்சம் அபராதம் என்று உள்ளாட்சித் துறை ...

news

தீபா பேரவையில் இணைந்த 32,000 பேர் - என்னாச்சு தூத்துக்குடிக்கு?

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர், தாங்கள் ஜெ. தீபா பேரவையில் ...

news

உங்களை சந்திக்கும் மோடி, அதிமுக எம்.பி.க்களை சந்திக்காதது ஏன்? - பதிலளிக்கும் நிர்மலா சீதாராமன்

முதல்வரைப் பார்க்காமல் எம்.பி.க்களைப் பார்க்க வேண்டுமா? எனக்குப் புரியவில்லை என்று மத்திய ...

news

அகதிகளுக்கு தடை: முதல் அடி உபேர் கால் டாக்ஸிக்கு!!

அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ...

Widgets Magazine Widgets Magazine