வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 22 ஜனவரி 2017 (16:17 IST)

பீட்டாவை தடை செய்ய ஆலோசனை: சுற்று சூழல் அமைச்சர் தகவல்

பீட்டாவிற்கு எதிர்ப்பு வலுப்பெற்று வருவதால், அதை தடை செய்ய அலோசனை செய்வதாக மத்திய சுற்று சூழல் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தாலும், ஜல்லிக்கட்டுக்கான முழுமையான தடையை நீக்கி நிரந்தர சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
 
இந்நிலையில் பீட்டா அமைப்பை தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய சுற்று சூழல் மந்திரி அனில்தாவே தெரிவித்து உள்ளார். 
 
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை வாங்கிய பீட்டா நிறுவனம் மீது போராட்டக்காரர்கள் அனைவரும் கடும் கோபத்தை கொட்டி போராடி வருகின்றனர். பீட்டா நிறுவனத்துக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.