தினகரனுக்கு விளம்பரம் தேடித் தர எனக்கு விருப்பமில்லை; மு.க.ஸ்டாலின்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (15:46 IST)
திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி என டிடிவி தினகரன் கூறியதை அடுத்து அவருக்கு விளம்பரம் தேடித் தர எனக்கு விருப்பமில்லை என செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 
சென்னையில் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து பேட்டியளித்த டிடிவி தினகரன், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
எங்கள் அணி திமுகவுடன் இணைந்துள்ளதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிட்டால் எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி இருக்கும். ஜெயலலிதா அமர்ந்த முதலமைச்சர் பதவியில் ஓபிஎஸ் மற்றும் பழனிச்சாமி ஆகியோரை எங்களால் பார்க்க முடியவில்லை எனறார்.
 
இதனையடுத்து பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
 
திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி என கூறி டிடிவி தினகரன் விளம்பரம் தேடப் பார்க்கிறார். டிடிவி தினகரனுக்கு விளம்பரம் தேடித்தர எனக்கு விருப்பமில்லை என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :