Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தான் யாருடைய மகன் என்பதை நிரூபிக்க கால அவகாசம் கேட்ட நடிகர் தனுஷ்!

தான் யாருடைய மகன் என்பதை நிரூபிக்க கால அவகாசம் கேட்ட நடிகர் தனுஷ்!


Caston| Last Modified வெள்ளி, 13 ஜனவரி 2017 (18:52 IST)
பிரபல நடிகர் தனுஷ் தங்கள் மகன் என சில மாதங்களுக்கு முன்னர் மதுரையை சேர்ந்த கதிரேசன் , மீனாட்சி தம்பதியினர் கூறினர். இது தொடர்பாக நீதிமன்றத்தையும் நாடினர் அந்த தம்பதியினர்.

 
 
நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனவும் பள்ளியில் படிக்கும் போது வீட்டில் இருந்து ஓடிச்சென்றதாகவும். அவரை சந்திக்க பல முறை முயற்சித்தும் கஸ்தூரி ராஜா அதனை தடுத்ததாகவும் தங்களின் மகன் தனுஷ் தங்களின் வாழ்க்கை செலவுக்கு மாதம் 65 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் எனவும் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 
இதனையடுத்து இது தொடர்பாக பதில் அளிக்க நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என்பதை நிரூபிக்க மரபனு சோதனை செய்யவும் தாங்கள் தயாராக அந்த தம்பதியினர் கூறினர்.
 
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை விசாரணைக்கு வந்த போது நடிகர் தனுஷ் சார்பில் விளக்கம் அளிக்க பதில் மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. மேலும் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் வேண்டும் என தனுஷ் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
 
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை மார்ச் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். தனுஷ் கஸ்தூரிராஜா மகன் தான் என அவரது தரப்பினர் கூறிவரும் நிலையில் பதில் மனுவை உடனே தாக்கல் செய்யாமல் கால அவகாசம் கேட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :