வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (12:17 IST)

தேசியமங்களம் சிவாயம் பிடாரியம்மன் கோவில் திருவிழா : புகைப்படங்கள்

அய்யர்மலை அருகே உள்ள தேசியமங்களத்தில் சிவாயம் பிடாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.


 

 
கரூர் மாவட்டம் அய்யர்மலை அருகே உள்ள தேசியமங்களத்தில் சிவாயம் பிடாரியம்மன் கோவில் திருவிழாவில் திரலான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று சென்றனர்.

சிவாயத்தில் உள்ள பிடாரியம்மன், கருப்பண்ணசாமி, மகாமாரியம்மன் போன்ற கோவில்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறும் போது சத்தியமங்களம், சிவாயம் ஊராட்சி மந்தைபகுதிகளில்  பிடாரிஅம்மன் தேரிலும், கிராம எல்லைகளை கருப்பண்ணசாமிகள் சுற்றி வருவதும்  வழக்கம். அதே போன்று இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 


 

 
அன்று முதல் சிவாயம் மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி கிராம மக்கள் விரதம் இருந்து பிடாரியம்மன், கருப்பண்ணசாமி, மகாமாரியம்மன் ஆகிய சாமிகளை தரிசனம் செய்து வந்தனர். முதல் நாள் திருவிழாவின் போது மறுகாப்பு கட்டுதல் ஊமைபுலி ஓட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. 2 ஆம் நாள் திருவிழாவில் கருப்பண்ணசாமி முன் செல்ல அலங்கரிக்கப்பட்ட தேரில் பிடாரிஅம்மனை பக்கதர்கள் தோளில் சுமந்தவாறு சிவயாத்தில் இருந்து புறப்பிட்டனர்.

வேளாங்காட்டுபட்டி, ஈச்சம்பட்டி, அக்கரைபட்டி, கீழாரிபட்டி, வேப்பங்குடி, ஊத்தாம்பட்டி, எரமநாயக்கன்பட்டி, ஆண்டிநாயக்கனூர் வழியாக தேசியமங்களம் மந்தைக்கு வந்தடைந்தது. அன்று இரவு ஆதனூர், அலங்காரிபட்டி, வில்லுக்கல்பட்டி போன்ற பல்வேறு கிராமமக்கள் பிடாரியம்மனுக்கு சிறப்பு பூசை செய்து வழிபட்டனர். 
 
பின்னர் அதிகாலை கிராமஎல்லை வழியாக கருப்பண்ணசாமி எல்லைகளை சுற்றிவந்தது தேசியமங்களம் மந்தைக்கு வந்தடைந்தது. அப்போது எல்லைகளில் தயாராக வைத்திருந்த கிடாக்களை வெட்டி கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக்கடன் செய்தும், மந்தையில் வைக்கப்பட்ட பிடாரிஅம்மனுக்கு பொங்கள் மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் வழிபட்டனர்.


 


அதனை தொடர்ந்து குப்பாச்சிபட்டி, அய்யனூர், பாம்பனூர், கந்தன்குடி, இரும்பூதிபட்டி, சடையம்பட்டி, கோடங்கிபட்டி, அய்யர்மலை சென்று சத்தியமங்களம் உள்பட பல்வேறு கிராம மந்தை மற்றும் எல்லைகளில் வழியாக சிவயாம் கோவில் சென்று சாமிகள் குடிபுகுந்தது. தொடர்ந்து நேற்றுமுதல் வருகிற செவ்வாய் கிழமை வரை மகாமாரியம்மன் திருவிழாவும் 3 நாட்கள் நடைபெறும். 
 
இந்த திருவிழாவில் சிவாயம், சத்தியமங்களம் ஊராட்சி கிராமக்கள் மற்றும் திருச்சி, கரூர், திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிடாரியம்மன் மற்றும்  கருப்பண்ணசாமியை தரிசனம் பெற்று சென்றனர்.
 
படவிளக்கம்:1. தேசியமங்களத்தில் நடந்த சிவாயம் பிடாரியம்மன் திருவிழாவில் தேவராட்டம் ஆடும் பக்தர்கள். 
 
படவிளக்கம்:2. தேசியமங்களத்தில் நடந்த சிவாயம் பிடாரியம்மன் திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட பிடாரியம்மன் தேரை பக்தர்கள் தோளில் சுமந்து செல்லும் காட்சி.

சி.ஆனந்தன் - கரூர் செய்தியாளர்