வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 30 ஜனவரி 2017 (16:07 IST)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ.தீபா போட்டி?: அதிரடி அரசியல் ஆரம்பம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ.தீபா போட்டி?: அதிரடி அரசியல் ஆரம்பம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானதையடுத்து அவரது தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. இதனையடுத்து அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா விருப்பம் தெரிவித்துள்ளார்.


 
 
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஜெ.தீபாதான் எனவும் சசிகலா தலைமையை ஏற்க மட்டோம் என அதிமுகவின் ஒரு பிரிவினர் ஜெ.தீபாவின் வீட்டின் முன் தினமும் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தான் அரசியல் இறங்க இருப்பதை உறுதிபடுத்தியிருந்தார்.
 
ஆனால் அவசரப்பட்டு அரசியலில் இறங்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் தீபா. தற்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய ஜெ.தீபா, மக்கள் விரும்பினால் நிச்சயமாக அனைத்து தேர்தலிலும் போட்டியிடுவோம். ஆனால், அதற்கு முன்னரே எங்களுடைய முடிவுகளும் அறிவிப்புகளும் அறிவிக்கப்படும்.
 
தொண்டர்களின் முடிவுகளை பரிசீலித்து வருகிறோம். பெரும்பாலான கருத்துகள் என்னவென்று தெரியவந்துள்ளது. என்னை பற்றி தவறான செய்திகள் பரப்பப்படுவது நான் அரசியலுக்கு வருவதை பலர் விரும்பவில்லை என்பதை வெளிகாட்டுகிறது.
 
பிரபல பத்திரிகையில் கூட என்னை பற்றி தவறான செய்திகள் வருவது வருந்தத்தக்கது. இளைஞர்கள் அரசியலுக்குப் வருவதை ஆதரிக்க வேண்டும். தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியமான தேர்தலாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வரும் சூழலில் தீபா அனைத்து தேர்தலிலும் போட்டியிடுவோம் என கூறியிருப்பது ஆர்.கே.நகர் தேர்தலை தான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.