Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாங்களும் பிரமாணப் பத்திரம் வச்சிருக்கோம் ; இரட்டை இலைக்காக களத்தில் குதிக்கும் தீபா


Murugan| Last Modified வியாழன், 15 ஜூன் 2017 (14:51 IST)
இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியிருப்பது, அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
ஓ.பி.எஸ் அணியும், முதல்வர் எடப்பாடி அணியும் ஏற்கனவே இரட்டை  இலை சின்னத்திற்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் 3 லட்சம் பிரமாணப் பத்திரங்களும், ஓபிஎஸ் தரப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன..
 
இந்த நிலையில், ஜெயலலிதா தீபா பேரவை சார்பில் 50 ஆயிரம் பிரமாணப் பாத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடி வரும் வேளையில் தற்போது தீபாவும் களத்தில் குதித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :