காக்க வைத்து கதவை சாத்திய தீபா - காரில் ஏறிப்போன மாதவன்


Murugan| Last Modified செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (17:46 IST)
ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு அவரின் கணவர் மாதவனுக்கும் இடையே எழுந்துள்ள பனிப்போர் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

 

 
சசிகலாவின் தலைமையை விரும்பாத அதிமுகவினர் சிலர் ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பக்கம் சென்றனர். எனவே, அவரும் அரசியலில் குதிப்பதாக கூறினார். அதன்பின் பேரவையை தொடங்கினார்.  ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டார்.
 
அந்நிலையில் தொடக்கம் முதல் அவருடன் இருந்த அவரின் கணவர் மாதவன், திடீரெனெ தனியாக கட்சி தொடங்கப் போகிறேன் எனக் கூறினார். மேலும், தீபா தீயவர்களின் பிடியில் சிக்கியுள்ளார் என பேட்டியும் கொடுத்தார். இது தீபாவின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
 
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானது தொடர்பாக நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் தீபா பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அவரின் கணவர் தீபா வந்தார். அவரைப் பார்த்தவுடன், அவரை இங்கிருந்து போகச் சொல்லுங்கள் என சிலரிடம் தீபா கூறினார். ஆனால், அங்கிருந்து செல்லாமல் செய்தியாளர்கள் அருகிலேயே மாதவன் நின்று கொண்டிருந்தார்.
 
அதன் பின் செய்தியாளர்கள் கூட்டம் முடிந்ததும் தனது வீட்டுக் கதவுகளை மூடிக் கொண்டு தீபா உள்ளே சென்று விட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் கணவர் மாதவன் சிறிது நேரம் காத்திருந்து விட்டு  அதன்பின் காரில் ஏறி சென்று விட்டார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :