ஜெ.தீபாவுக்கு ஆதரவாளர்கள் வைத்துள்ள பெயர் என்ன தெரியுமா?

ஜெ.தீபாவுக்கு ஆதரவாளர்கள் வைத்துள்ள பெயர் என்ன தெரியுமா?


Caston| Last Modified புதன், 1 பிப்ரவரி 2017 (16:49 IST)
தமிழக அரசியலில் தங்கள் தலைவர்களை பெயர் சொல்லி அழைக்காமல் அவர்களுக்கு பட்டப்பெயர் சூட்டி குறிப்பிடுவது வழக்கமான ஒரு நடைமுறையாக உள்ளது. சில சமையங்களில் அவர்கள் பெயரை சொல்லி அழைத்ததால் சட்டமன்றத்தில் அமளிகள் கூட நடந்திருக்கிறது.

 
 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என அதிமுகவினர் அழைப்பர், தற்போது சசிகலாவை சின்னம்மா என அழைக்கின்றனர். திமுக தலைவர் கருணாநிதியை கலைஞர் எனவும் ஸ்டாலினை தளபதி எனவும் அழைக்கின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவையும் அவரது ஆதரவாளர்கள் பட்டப்பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
 
ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலாவின் தலைமையை விரும்பாதல் பலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பக்கம் உள்ளனர். ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு ஏற் தீபாவும் அரசியலில் இறங்க தயாராகி வருகிறார்.
 
இந்நிலையில் தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன்னர் தினமும் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் அன்று தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ள தீபா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க தயாராகி வருகிறார். இந்நிலையில் தீபாவை அவரது ஆதரவாளர்கள் மக்கள் தலைவி என அடைமொழி வைத்து அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :