Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்; தீபா உறுதி


Abimukatheesh| Last Updated: வியாழன், 9 மார்ச் 2017 (17:12 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் அறிவித்தப்படி போட்டியிடுவேன என தீபா தெரிவித்துள்ளார். 

 

 
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் வரை நடைபெற உள்ளது.
 
ஓ.பி.எஸ். மற்றும் சசிகலா ஆகிய இரு அணியினரும் ஆர்.கே நகர் தொகுதியை கைப்பற்ற தீவிர முயற்சியில் உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஏற்கனவே ஆர்.கே. நகர் தொகுதியில் தனது அரசியில் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். திமுக கட்சி தங்களை நீருபிக்க அவர்களது பங்குக்கு தீவிரமாக இறங்கியுள்ளனர். 
 
தீபா ஆரம்பத்திலேயே தனது அத்தை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுன் தன்னை தொடர்பு கொண்ட ஆதரவாளர்களளிடம் தீபா இதனை தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :