வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (20:50 IST)

கனமழைக்கு இதுவரை176 பேர் பலி: ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

தமிழகத்தில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழைக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் தொடர்ந்து கனமழை பெய்ய கூடும் என்றால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வட கிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொருட் சேதமும் ஏற்பட்ட அதே நேரத்தில் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது  மழை தொடங்கியதில் இருந்து இதுவரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, மின்சாரம் பாய்ந்தது உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் இதுவரை மழைக்கு 176 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் மழையால் உயிரிழிப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. ஏனென்றால், பட இடங்களில் இயல்பு நிலை இன்னும் திரும்ப வில்லை மற்றும் ஆறு, ஏரி, கால்வாய் மற்றும் குளங்களில் தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டு செல்கிறது,

தாழ்வான பகுதிகள் மழை நீரால் தத்தளித்த கொண்டு இருக்கிறது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறு, கால்வாய்களில் சிறுவர்கள் குளிக்கவோ வேடிக்கை பார்க்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுகிறது.
 
ஏரிகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் ஆறு மற்றும் கால்வாய்களில் அபாயகரமான அளவை தாண்டி ஓடுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பல இடங்களில் போலீஸாரால் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கைகள் விடப்பட்டு வருகிறது