பண மோசடி ராணி அனிதாவின் மது விருந்து குத்தாட்ட வீடியோ வெளியானது


Ashok| Last Updated: செவ்வாய், 16 பிப்ரவரி 2016 (10:16 IST)
சமூக வலைதளங்கள் மூலம் பல இளைஞர்களுக்கு காதல் வலை வீசி பணத்தை கறந்த அருப்புக்கோட்டை அனிதா, அவர்களை வீட்டுக்கு வர வழைத்து மது விருந்தளித்து குத்தாட்டம் போட்ட பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

 
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியும், பேஸ்புக் மூலம் காதல் வலை வீசி பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கறந்த அருப்புக்கோட்டை அனிதா சில நாட்களுக்கு முன்பு சென்னையில் போலீசார் கைது செய்தனர். 
 
இதற்கு முன்னதாக,  சென்னை உயர்நீதி மன்ற வளாக காவல்நிலையத்தில் பெரும்பாக்கத்தில் வசித்து வந்த அனிதா மீது 7 இளைஞர்கள் புகார் கொடுத்தனர். அதில் அனிதா உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, ஒவ்வொருவரிடமும் ரூ.3லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் வாங்கினார். ஆனால் யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. தற்போது, பணத்தை திருப்பிக் கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று கூறியிருந்தனர்.

 
இந்த புகாரின் அடிப்படையில் அனிதா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியும், பேஸ்புக் மூலம் காதல் வலை வீசி பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கறந்துள்ளார், பின்னர், அவர்களை வீட்டிற்கு வரவழைத்து மது விருந்தளித்து அவர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார். 
 
இளைஞர்களிடம் வாங்கிய பணத்தில், சென்னை பெரும்பாக்கத்திலும், அருப்புக்கோட்டையிலும் உறவினர்கள் பெயரில் வீடுகளைக் கட்டியுள்ளதாகவும், மேலும், பினாமிகளின் பெயரில் பல்வேறு இடங்களில் வீடுகளையும், நிலங்களையும் வாங்கி குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பல அரசியில் பிரமுகர்களையும்  வீட்டுக்கு வரவழைத்து மது விருந்தளித்து லட்ச கணக்கில் பணத்தை கறந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது, அவர்களுடன் அனிதா போட்ட குத்தாட்ட வீடியோ கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :