1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2015 (23:25 IST)

பயிர் சேதத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்: கனிமொழி கோரிக்கை

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தை ஆய்வு செய்ய மத்திய குழுவை மீண்டும் அனுப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, திமுக எம்.பி. கனிமொழி எழுதியுள்ள கடிததில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெய்த கனமழையால் கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்கள் நெற்பயிர்கள்  கடுமையாக பாதிக்கப்பட்டன.
 
இந்த மழை வெள்ளத்தை, மிகவும் மோசமான இயற்கை பேரிடர் என்று வரையறுத்துள்ளது. இந்த மழை வெள்ளத்தினால் விவசாய பாதிப்பு குறித்து அதிகாரிகள் அளவிடவில்லை. எனவே, அதிகாரிகளின் குழுவை நியமித்து, சம்பந்தப்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளோடு ஆவேசனை நடத்தி,  பயிர் சேதத்தை முழுமையாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.