1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (10:06 IST)

முதலைப் பண்ணையில் இருந்து முதலைகள் தப்பிச் சென்றதாக கூறப்படுவது வதந்தி: முதலைப் பண்ணை இயக்குநர்

முதலைப் பண்ணையில் இருந்து முதலைகள் கடல் வழியாக தப்பிச் சென்றதாக கூறப்படுவது வதந்த என்று வட நெம்மேலி முதலைப் பண்ணை இயக்குநர் ஜாய் விட்டேகர் தெரிவித்துள்ளார்.


 

 
மாமல்லபுரத்தை அடுத்த வட நெம்மேலியில் முதலைப் பண்ணை உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான முதலைகள் உள்ளன.
 
இந்த முதலைப் பண்ணையில் இருந்து முதலைகள் தப்பிச் சென்றுவிட்டதாக வெளியான தகவல் வேகமாகப் பரவியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
 
இந்நிலையில், முதலைப் பண்ணையில் இருந்து முதலைகள் எதுவும் தப்பிக்கவில்லை என்றும், இது வதந்தி என்றும் முதலைப் பண்ணை இயக்குநர் ஜாய் விட்டேகர் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து ஜாய் விட்டேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
வடநெம்மேலி முதலைப் பண்ணையில் ஆயிரக்கணக்கான முதலைகளை நாங்கள் பராமரித்து பாதுகாத்து வருகிறோம். முதலைகள் ஏழு அடி உயர சுவர்களுக்கு மத்தியில் உள்ள குடில்களில் அடைக்கப்பட்டுள்ளன.
 
இவற்றிற்கு மேல் பாதுகாப்புக்காக கம்பி வலைகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இங்குள்ள முதலைகள் நன்னீரில் வாழும் தன்மை கொண்டவை. கடல் நீரில் வாழும் தன்மை இவைகளுக்கில்லை.
 
அப்படி கடலுக்கு தப்பிச்சென்றாலும் அந்த சீதோஷ்ன நிலை இவற்றுக்கு ஒத்துவராது. முதலைகள் இறந்துவிடும். யாரோ சில விஷிமிகள் வீண் வதந்தியை பரப்பி விட்டுள்ளனர்.
 
இங்கு இருந்து முதலைகள் தப்பிச் செல்ல ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை. இவ்வாறு ஜாய் விட்டேகர் கூறியுள்ளார்.