பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சினிமா மோகம்: தணிக்கை அதிகாரிக்கு நீதிமன்ற சம்மன்!

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய சினிமா மோகம்: தணிக்கை அதிகாரிக்கு நீதிமன்ற சம்மன்!


Caston| Last Updated: செவ்வாய், 21 மார்ச் 2017 (15:58 IST)
மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவி ஒருவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் ஓடிப்போய் தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளார். இதற்கு காரணம் சினிமா காட்சிகள் தான் என அந்த மாணவி நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

 
 
கடந்த ஆண்டு மே மாதம் 12-ஆம் வகுப்பு படித்து வந்த தனது மகள் காணாமல் போனதாக மயிலாடுதுறையை சேர்ந்த சுந்தர் ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் அந்த பகுதியை சேர்ந்த விமல்ராஜ் என்ற இளைஞருடன் ஓடிப்போனது தெரியவந்தது.
 
மாணவியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நேற்று அந்த மாணவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த அந்த மாணவி, தான் விரும்பி தான் விமல் ராஜுடன் சென்றதாகவும் தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
மேலும் தமிழ் சினிமாக்களில் வரும் காட்சிகள் தன்னை இவ்வாறு செய்யத் தூண்டியதாகவும் நீதிபதிகளிடம் அந்த சிறுமி தெரிவித்திருந்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் மோசமான திரைப்படங்களால் இளைய சமுதாயம் சீரழிந்து வருவதாக வேதனை தெரிவித்தார்.
 
போஸ்கோ சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை செய்யத் தூண்டும் அளவிலான காட்சிகளை, திரைப்படங்களில் இடம்பெற தணிக்கைத் துறையினர் எவ்வாறு அனுமதிக்கின்றனர் என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பாக நேரில் ஆஜராகி பதிலளிக்க தணிக்கைத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியும் உத்தரவிட்டனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :