வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2015 (19:15 IST)

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு குறித்து விசாரணை வேண்டும் : ஆளுநரிடம் கருணாநிதி மனு

செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது பற்றி நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.


 
 
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை, சென்னை ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரிடம் மனு ஒன்றை கொடுத்தார். 
 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது “செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்து விட்டது குறித்து நீதிபதி தலைமையில் விசாரண நடத்த வேண்டும். இதற்காக உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும். மழை நிவாரண பணிகளில் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை வெள்ளதால் பாதிக்கபட்டோருக்கு போதுமான நிவாரணம் வழங்க செய்ய வேண்டும். மழையை எதிர்கொள்ள அரசு மோதுமான நடவடிக்கை எடுக்கவில்லை”  என கூறப்பட்டு உள்ளது  
 
ஏற்கனவே உயர் நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நிவாரண பணிகளில் ஒருங்கினைந்து செயல்படவில்லை என்று தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ததோடு, மத்திய மாநில அரசுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.