Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா பொதுச்செயலாளராக நீடிக்கலாம்: நீதிமன்றம் அதிரடி!

சசிகலா பொதுச்செயலாளராக நீடிக்கலாம்: நீதிமன்றம் அதிரடி!

Last Modified: சனி, 29 ஜூலை 2017 (10:06 IST)

Widgets Magazine

பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்க தடை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


 
 
ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்க தடை விதிக்க கோரியிருந்தார்.
 
மேலும் அந்த மனுவில், சசிகலா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். ஆனால் அவரது ஆலோசனையின்படி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செயல்படுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
 
ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க சசிகலா உடன் ஆலோசித்ததாக ஆளும் கட்சி வெளிப்படையாக அறிக்கை வெளியிடுகிறது. ஆளும் கட்சியின் இந்த நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஊழலுக்கு எதிரான சட்டங்களை அவமதிக்கும் செயல். எனவே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நீடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கவுல் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை தொடங்கியதும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர்.
 
ஒருவர் தண்டனை பெற்றவராக இருந்தாலும் அவரிடம் ஆலோசனை பெறுவதை எந்த வகையிலும் தடுக்க முடியாது. அறிவுரை கூற தகுதியானவராக இருந்தால் அவர் தண்டனை பெற்றவராக இருந்தாலும் அவரிடம் ஆலோசனை பெறுவதில் தவறு ஏதும் கிடையாது. எனவே சசிகலாவிடம் அவருடைய கட்சியினர் ஆலோசனை பெறுவதில் தவறு இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிக்பாஸ் வீட்டில் வடிவேல், சந்தானம் இருக்க வேண்டும். அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் தமிழகத்தை அஸ்வின் சமீபத்தில் அளித்த ...

news

பாஜகவில் சேருகிறாரா ஓபிஎஸ்?

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பரபரப்பை ஏற்படுத்தி வந்த ...

news

20 ஆப்ஸ்களை திடீரென நீக்கிய கூகுள்: எதனால் தெரியுமா?

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக 20 ஆப்ஸ்கள் நீக்கப்பட்டுள்ளது. கூகுளின் இந்த ...

news

52 ஆண்டுகளுக்கு பின் தனுஷ்கோடிக்கு சென்ற முதல் பேருந்து

கடந்த 1964ஆம் ஆண்டு இராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் பயங்கர புயல்காற்றுடன் கூடிய ...

Widgets Magazine Widgets Magazine