Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறையில் தள்ளிவிடுவேன்: ஜெ. மகன் என கூறிய இளைஞருக்கு நீதிபதி எச்சரிக்கை!!


Sugapriya Prakash| Last Updated: வெள்ளி, 17 மார்ச் 2017 (20:12 IST)
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகன் எனக்கூறிக்கொண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் கடந்த வாரம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

 
 
ஜெயலலிதாவுக்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன், தான் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர், ஜெயலலிதாவை தனது தாயாக அறிவிக்கக்கோரியும், ஜெ.வை சசிகலா கொலை செய்ததாகவும், அவர்களிடம் தனக்கு உயிர்பாதுகாப்பு வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியுள்ளார். 
 
மேலும், ஜெயலலிதாவின் வாரிசுக்கு சேர வேண்டிய சொத்துக்களை முறைப்படி தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்த மனு, நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு என தெளிவாக கூறிய நீதிபதி, கிருஷ்ணமூர்த்தியின் அனைத்து ஆவணங்களையும் முறையாக ஆய்வு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
 
மேலும், நீதிமன்றத்தை வீணடித்ததற்காக சிறைக்கு அனுப்பிவிடுவேன் என்றும் கிருஷ்ணமூர்த்தியை நீதிபதி மகாதேவன் எச்சரித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :