வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 2 மே 2015 (14:28 IST)

மாணவனுடன் சேர்ந்து வாழ கல்லூரி பேராசிரியைக்கு நீதிமன்றம் அனுமதி

கல்லூரி மாணவனை திருமணம் செய்து கொண்ட கல்லூரி பேராசிரியையுடன் சேர்ந்து வாழ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 
விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர் அந்த கல்லூரி மாணவனுடன் ஓட்டம் பிடித்தார். பின் திருமணம் செய்துகொண்டு எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
 
விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த ரம்யா(24). எம்.ஏ., எம்.பிஃல்., பட்டதாரியான இவர், விழுப்புரம் அருகே உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணி புரிந்து வந்தார். அதே கல்லூரியில் பி.பி.ஏ. 3ஆம் ஆண்டு படிக்கும் சதீஷ்குமார் (21) என்ற மாணவரை கல்லூரி பேராசிரியை காதலித்து வந்துள்ளார்.
 
மேலும், கடந்த 29ஆம் தேதி ரம்யா திடீரென்று மாயமானர். இது குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எனவே இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து, ரம்யாவின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
 
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு விழுப்புரம் பாதுகாப்பு கேட்டு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருவரும் தஞ்சமடைந்தனர். பின்னர் போலீசார் ரம்யாவை காவல் துறையினர் நீதிபதி வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.
 
அப்போது அவர் தனது சுயவிருப்பத்தின் பேரில்தான் மாணவர் சதீஷுடன் சென்றதாகவும், சட்டப்படி தங்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் நீதிபதி அவர்கள் இருவரும் தங்களது விருப்பப்படி சேர்ந்து வாழலாம் என உத்தரவிட்டுள்ளார்.