சிறுவர்கள் ஆபாச வலைத்தளம் நடத்திய கணவன் மனைவி கைது

சிறுவர்கள் ஆபாச வலைத்தளம் நடத்திய கணவன் மனைவி கைது


Dinesh| Last Updated: புதன், 27 ஜூலை 2016 (13:02 IST)
சென்னையில் ஆபாச கட்டண வலைத்தளம் நடத்தியதாக ஒரு தம்பதியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 


சென்னையில் வசித்துவரும் ஒரு தம்பதியர் குழந்தைகளின் பாலியல் உறவு தொடர்பான காட்சிகளை வெளியிடும் கட்டண வலைத்தளத்தை நடத்தி வருவதாக சைபர் கிரைம் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த வலைத்தளத்தில் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்பவர்களின் ஐ.பி. நம்பர் மற்றும் இமெயில் ஐ.டி.க்களை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து, சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூரில் வீட்டில் இருந்தபடி ஒரு தம்பதியர் இரண்டு வலைத்தளங்களில் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்வது காவல்துறையினரின் சோதனையில் தெரியவந்தது.

இந்த வலைத்தளங்களை பார்வையிட வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 2 கோடியே 40 லட்சம் ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளதாகவும், மேற்படி தொகை பெங்களூரில் உள்ள ஒரு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதையும் விசாரணையில் கூறியுள்ளனர். இதையடுத்து, இந்த ஆபாச வலைத்தளங்களை நடத்திவந்த சித்தாத்தா வேலு மற்றும் அவரது மனைவி பிரிசில்லா மார்கிரெட் தன்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :