வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 12 ஜனவரி 2021 (11:42 IST)

தாமாக முன் வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி – சுகாதாரத்துறை செயலர் அறிவிப்பு!

தமிழகத்தில் தானாக முன்வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்  அறிவித்துள்ளார்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு பூனேவில் இன்று காலை தடுப்பூசிகள் வந்து சேர்ந்துள்ளன.

இதில் சீரம் நிறுவனத்திடம் இருந்து 5,36,500 தடுப்பூசிகளும். பாரத் பயோ டெக் நிறுவனத்திடம் இருந்து 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளும் அடக்கம். கொரோனா தடுப்பூசி குறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ‘மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் போடப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல, தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும். 30 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை போடப்படும்.’ எனக் கூறியுள்ளார்.