Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தொடர் விடுமுறை எதிரொலி: டிராபிக்கில் ஸ்தம்பித்த சென்னை


sivalingam| Last Modified சனி, 12 ஆகஸ்ட் 2017 (08:02 IST)
சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்கள் ஒரே நேரத்தில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் டிராபிக்கால் அந்த பகுதியே ஸ்தம்பித்தது


 
 
பள்ளி,  கல்லூரி மாணவர்களும், ஐ.டி கம்பெனிக்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் உள்பட பெரும்பாலானோர் நேற்று மாலையிலிருந்தே தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்கள் அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிவதால் பேருந்துகளில் மட்டுமே செல்ல வேண்டிய நிலை உள்ளது. கூட்டத்தை பயன்படுத்தி  வழக்கம்போலவே டிக்கெட் விலையை திடீரென ஆம்னி பஸ் உரிமையாளர்கள் உயர்த்த விழி பிதுங்கி செய்வதறியாது நிற்கிறார்கள் ஆயிரக்கணக்கான பயணிகள். 
 
அதிகப்படியான கூட்டத்தோடு நேற்று இரவு மழையும் பெய்ததால் கோயம்பேட்டில் இருந்து தொடங்கிய டிராபிக் பல கிலோமீட்டர்களுக்கு தொடர்ந்தது. இதனால் சென்னையின் பெரும்பகுதி ஸ்தம்பித்தது.
 


இதில் மேலும் படிக்கவும் :