சிந்துவுக்கும் சென்னைக்கும் அதிக தொடர்பு இருக்கிறது

சிந்துவுக்கும் சென்னைக்கும் அதிக தொடர்பு இருக்கிறது


Dinesh| Last Modified ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (08:40 IST)
ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்துவின் குடும்பம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசிக்கின்றனர்.

 


இவரது குடும்பமே பாரம்பரியமான விளையாட்டு குடும்பம். சிந்துவின் தந்தை பி.வி ரமணா முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர் ஆவார். இதற்காக அவர் அர்ஜுனா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், சிந்துவின் தாய் விஜயாவும் கைப்பந்து வீராங்கனை தான்.

சிந்துவின் தாய் விஜயவாடாவில் பிறந்தவர், ஆனால் அவர், குடும்பத்தினருடன் சென்னை தி.நகரில் தான் வசித்து வந்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே தான் முடித்தார். அதோடு மட்டும்மல்லாமல், அவர்,  தமிழ்நாடு கைப்பந்து அணிக்காக 1977 முதல் 1983 வரை  விளையாடியவர்.

மேலும், சிந்து, கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகனான விஜயபிரபாகரனின் 'சென்னை ஸ்மாஷர்ஸ்' மேட்மிண்டன் அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :