1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2016 (11:28 IST)

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் முயற்சி?

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் முயற்சி?

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து நிற்பதற்குத் தயாராகவே இருப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
 

 
திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளைத் துவங்குவதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்த வாரத்தில் சென்னை வரக்கூடும் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அது குறித்து கட்சித் தலைமையிடமிருந்து தனக்கு எந்தத் தகவலும் வரவில்லையென்றும் அவர் கூறினார். ஊடகங்களில்பார்த்துத்தான் இதனைத் தான் அறிந்துகொண்டதாகவும் கூறினார்.
 
கூட்டணியின்றி, 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கவும் காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும் இளங்கோவன் தெரிவித்தார்.
 
திமுக தரப்பில் இதுகுறித்துக் கேட்டபோது, திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்கக்கூடும் என்றும் அதுதொடர்பாக விரைவில் வெளிப்படையான பேச்சுவார்த்தைகள் துவங்கும் என்றும் அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவித்தனர்.
 
விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
 
தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பதற்கு திமுக தலைவர் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்த நிலையில், பாரதீய ஜனதாக் கட்சி, மக்கள் நலக் கூட்டணி ஆகியவையும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க முயன்று வருகின்றன.