வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2015 (00:12 IST)

காங்கிரஸ் எழுச்சியை தடுக்கவே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது வழக்கு: குஷ்பு பரபரப்பு தகவல்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் எழுச்சியை தடுக்கவே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
 

 
பிரமதர் மோடி - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து, சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தன் காரணமாக, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது, தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. மேலும், அதிமுகவினர் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
 
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பணியாற்றிய வளர்மதி என்பவர், தன்னை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் நாராயணன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் நாராயணன் மீது காவல்துறையினர் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். தன்னை காவல்துறை கைது செய்யாமல் இருக்க ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நீதி மன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.
   
இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின் படி மதுரையில் தங்கி, தல்லாகுளம் காவல் நிலையத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
 
இதனையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு, சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்து பேசினார்.
 
அதன் பிறகு,  காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். இதனால், அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.
 
தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வந்த பிறகு தான் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெற்றுள்ளது. தமிழகத்தில் நடப்பதை முன்பே செல்கிறார். அது மறு நாள் நாளிழ்களில்  தலைப்பு செய்திகளாக வருகிறது. மேலும், அவர் கூறும் தகவல்கள்  ஆதாரத்துடன் இருக்கும். அதனால்தான், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது சிலருக்கு பயம், சிலருக்கு கோபம். ஆனால், அனைத்து வழக்குகளில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.