1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 26 நவம்பர் 2014 (11:19 IST)

பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் - ராமதாஸ்

மதுவின் தீமைகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டுமானால் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
மனித உயிர்களைப் பறிக்கும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய், தமிழகத்தில் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
இந்த நோய் தாக்குவதற்கு அளவுக்கு அதிகமான மதுப் பழக்கம்தான் காரணமாகும். கடந்த 10 ஆண்டுகளில் இந்த நோயால் தமிழகத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
மது விற்பனையால் அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தைவிட, மக்களுக்கும் நாட்டுக்கும் ஏற்படும் இழப்பு அதிகமாகும். எனவே, மதுவின் தீமைகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டுமானால் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
 
மது பழக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதியும், மனநல ஆலோசனையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.