செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (12:24 IST)

தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் - ஜெயக்குமாருக்கு சிக்கல்

பரிந்துரைப்புக்காக தன்னிடம் வந்த ஒரு இளம் பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் கற்பழித்து அவரை தாயாக்கி விட்டதாக மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 
கடந்த சில நாட்களாக பெண்ணுடன் ஒருவருடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. அதில், சிபாரிசுக்கு வந்த தனது மகளை இப்படி செய்து விட்டீர்களே.. தற்போது குழந்தை பிறந்து விட்டது என்ன செய்ய? என அப்பெண் புலம்புவது பதிவாகியிருந்தது. மேலும், அந்த பெண்ணிற்கு பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் டி. ஜெயக்குமார் என பதிவிடப்பட்டுள்ளது.
 
ஆனால், இதை மறுத்துள்ள ஜெயக்குமார் “சமூக வலைதளங்களில், வெளியாகியிருக்கும் ஆடியோ என்குரல் கிடையாது. எனது குரலில் ஆடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளது. என்மீது களங்கம் கற்பிக்கும் நோக்கில் தினகரன் தரப்பினர் இவ்வாறு செய்து வருகின்றனர். மேலும் என்னைப் போன்று பல ஜெயக்குமார்கள் இருக்கின்றனர். யாரிடமும் நான் பேசவில்லை. இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என கூறியுள்ளார்.
 
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அமைச்சர் ஜெயக்குமார் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு, அதை கலைக்குமாறு மிரட்டினார். இதற்கு மறுத்துவிட்டதால் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பான ஆடியோ ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த போது அதை அவர்கள் ஏற்கவில்லை. எனவே, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், வழக்கறிஞர் சுரேஷ்பாபு என்பவரும் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் படி விரைவில் டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமைச்சர் ஜெயக்குமாருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.