1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 30 ஜனவரி 2015 (19:27 IST)

புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்காக கல்லூரி பெண்கள் தலைமுடி தானம்

சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்களது தலை முடியை தானமாக வழங்கினார்கள்.
 
அடையாறு புற்றுநோய் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் கல்லூரி மாணவிகளிடம் தலைமுடியை தானமாக பெற்று அதை செயற்கை தலை முடியான விக் செய்து அந்த விக் அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை மூலம் புற்றுநோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
 

 
இந்த திட்டத்திற்காக பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் தலைமுடியை தானமாக வழங்கியுள்ளனர். தலைமுடியை தானமாக வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சங்க தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவருமான சரத்குமார் தலைமுடியை தானமாக வழங்கிய மாணவிகளை பாராட்டினார்.
 

 
பிறகு இது குறித்து கூறுகையில் ‘புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலை முடி உதிர்ந்து போகிறது. அதனால் அவர்களால் வெளியே செல்ல முடியவில்லை. அது மட்டுமல்ல தலை முடி இல்லை என்றாலே அவருக்கு புற்றுநோய் என்றும் அடையாளம் தெரிகிறது.
 
எனவே அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விக் அவசியம். அந்த விக் செய்ய தலை முடியை தானமாக கொடுத்துள்ள மாணவிகளை பாராட்டுகிறேன்’ என்றார்.