வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2014 (14:07 IST)

கோவை பாஜக மேயர் வேட்பாளர் அதிமுகவினரால் தாக்கப்பட்டதால் பரபரப்பு

கோயமுத்தூர் மாநகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிடும் மேயர் வேட்பாளர் நந்தகுமார் இன்று அதிமுகவினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார்.
 
இன்று காலை சௌரிப்பாளையம் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுவைச் சேர்ந்த வெளியூர் நபர்கள் தங்கள் கார்களுடன் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். போடிநாயக்கனூரைச் சேர்ந்த 20 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அந்த இடத்துக்கு நந்தகுமார் தலைமையில் பாஜகவினர் சென்றுள்ளனர். அப்போது 20 பேர் கொண்ட மர்ம கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நந்தகுமாரையும் உடன் வந்தவர்களையும் அடித்து, கார்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனால், நந்தகுமார் கையில் காயம் ஏற்பட்டது. மேலும் நந்தகுமாரின் சட்டையைப் பிடித்து இழுத்து அந்த கும்பல் கொலைமிரட்டல் விடுத்துள்ளது.
 
இதில், கோவை மாவட்ட பாஜக துணைத் தலைவர் தாமு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரது கார் அந்த கும்பலால் சேதப்படுத்தப்பட்டது.
 
இதை அடுத்து, பீளமேடு காவல்நிலையம் முன் குவிந்த பாஜகவினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அவர்களுடன் கூட்டணிக் கட்சிகளான மதிமுக தேமுதிக கட்சி நிர்வாகிகளும் உடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.