அப்பாவியை ஏமாற்றி மூன்றாவதாக திருமணம் செய்த நடிகை கைது


Murugan| Last Modified செவ்வாய், 16 பிப்ரவரி 2016 (11:37 IST)
தனக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமானதை மறைத்து மூன்றாவது ஒருவரை திருமணம் செய்ததோடு, அவரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சென்னையில் வசித்துக் கொண்டிருந்த துணை நடிகை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 
சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் அனூப் ஜோசப். இவர் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர். இவர் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த அன்சி என்ற பெண்னை 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். ஒரு வாரம் கழித்து, ஒருவேலை விஷயமாக தனது பெற்றோர் மற்றும் மனைவி ஆன்சியுடன் சென்னைக்கு கிளம்பியுள்ளார்.
 
செல்லும் வழியில், அவரின் மனைவி ஆன்சி, திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஒரு வேலை இருப்பதாக கூறி சென்றுள்ளார். இதுபற்றி அவரிடம் அனூப் விசாரித்த போது அவரிடம் ஆன்சி கோபமாக பேசியுள்ளார்.
 
சந்தேகம் அடைந்த அனூப், நீதிமன்றத்தில் ஆன்சியை பற்றி விசாரித்துள்ளார். அப்போது அவருக்கு பிலோமினா, மீனா என பல பெயர்கள் இருப்பதும், இதற்கு முன் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரை திருமணம் செய்தவர் என்பதும், மேலும் அவரின் 15 வயது மகள் மற்றும் 9 வயது மகன்  ஆகியோரை விஷம் கொடுத்து ஆன்சி கொலை செய்த விவகாரமும் அனூப்பிற்கு தெரியவந்தது.
 
மேலும், ஆன்சி மீது பல வழக்குகள் நிழுவையில் இருப்பதும், அவர் பல ஆண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்பதும், அவர் மீது விபச்சார வழக்கு மற்றும் தேனியில் ஒரு நகை கடையில் திருடியதாக ஒரு வழக்கும் காவல் நிலையங்களில் இருப்பதை தெரிந்து கொண்ட  அனூப்பிற்கு  தலை சுற்றியது.
 
இதுபற்றி ஆன்சியிடம் அவர் கேட்டபோது, ரூ.50 லட்சம் பணமும் 100 பவுன் நகையும் கொடுக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனூப்பின் குடும்பத்தையே சிறையில் தள்ளி விடுவேன் என்று ஆன்சி மிரட்டியுள்ளார். அதோடு சில தினங்களுக்கு முன்பு, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் மூன்று பேர் சேர்ந்து அனூப்பை, வெட்டி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். 
 
இதுபற்றி அனூப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தன்னை பற்றிய விவரங்களை ஆன்சி தன்னிடம் மறைத்து, தன்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தன்னை ஏமாற்றி திருமணம் செய்த ஆன்சி மீதும், தன்னை கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிய மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார்.
 
அவரது புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆன்சியை தேடி வந்தனர். ஆனால் மதுரை, சென்னை அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். இதனால் அவரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
 
கடைசியில், சென்னை சாலிகிராமத்தில் அவர் பதுங்கியிருந்த போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைதானா ஆன்சி நடிகர் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்திலும், சில தொலைக்காட்சி தொடரிலும் துணை நடிகையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :