சரத்குமார் - ராதிகா மகள் நிச்சயதார்த்தம்: முதல்வர் வாழ்த்து


Bala| Last Updated: புதன், 23 செப்டம்பர் 2015 (18:03 IST)
சரத்குமார் - ராதிகாவின் மகள் ரேயான் - அபிமன்யு மிதுன் திருமண நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் நடந்தது. மணமக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

சரத்குமார்- ராதிகா தம்பதியின் மகள் ரேயானுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

விழாவில் நடிகர்கள் பிரபு, ராம்குமார், ராதாரவி, பாக்யராஜ், மோகன், சிவகுமார், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், சமுத்திரகனி நடிகைகள் ஸ்ரீப்ரியா, அம்பிகா, மீனா, குஷ்பூ, சங்கீதா விஜய், மகேஸ்வரி சத்யராஜ் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் திருமண நிச்சயதார்த்தத்துக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தங்கள் மகள் ரேயான் திருமணத்துக்கு வருமாறு என்று நேரில் வந்து அழைத்தமைக்கு நன்றி. நிச்சயதார்த்த விழாவுக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்க விரும்பியபோதிலும், எனது அலுவல்கள் காரணமாக வர முடியவில்லை. இல்லற வாழ்வில் இணையவுள்ள ரேயான் - முகுந்த் இருவருக்கும் எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :