Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புறப்பட்டார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அதிமுக பொதுக்குழுவில் பொங்கி எழுவாரா?

புறப்பட்டார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அதிமுக பொதுக்குழுவில் பொங்கி எழுவாரா?

வியாழன், 29 டிசம்பர் 2016 (08:51 IST)

Widgets Magazine

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்கு அவர் வகித்த பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க தயாரிகிவிட்டது அதிமுக.


 
 
இன்று நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் புதிய பொதுச்செயலாளர் யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய முடிவு எடுக்கப்படும். சசிகலா தான் அடுத்த பொதுச்செயலாளர் என திமுக மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாக கூறி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதற்கு தடையாக இருக்கிறார் எனவும் அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
 
இன்னும் 45 நிமிடத்தில் நடைபெற உள்ள இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வர் பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் இருந்து சற்று நேரத்திற்கு முன்னர் புறப்பட்டார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளர் ஆகாத நிலையில் பன்னீர்செல்வம் அந்த பதவியை வகிப்பார்.
 
ஆனால் தொண்டர்கள் மத்தியில் சசிகலா தலைமைக்கு எதிர்ப்பே உள்ளது. இதனை கட்சியின் பொருளாளராக இருக்கும் முதல்வர் பன்னீர்செல்வம் பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த சில தினங்களாக சசிகலாவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் சரியான புரிதல் இல்லாமல் மோதல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கு பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அவர் பொருளாளர் என்பதால் இந்த கூட்டத்தில் கட்சியின் வரவு செலவு கணக்கை தக்கல் செய்வார் என கூறப்படுகிறது. முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

அதிமுக பொதுக்குழு 30 நிமிடங்களில் கதம் கதம்: இது தான் நடக்குமாம் இன்று!

ஒட்டு மொத்த தமிழகமும் இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவை எதிர்பார்த்துக்கொண்டு ...

news

பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால் 4 ஆண்டு சிறை! - மத்திய அரசு அதிரடி சட்டம்

மார்ச் 31ஆம் தேதிக்குப் பின், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு ...

news

உச்சக்கட்ட பரபரப்பில் அதிமுக பொதுக்குழு: பொதுச்செயலாளர் சசிகலாவா? பன்னீர்செல்வமா?

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, பரபரப்பான சூழ்நிலையில் முதன்முறையாக அதிமுக செயற்குழு ...

news

197 வேட்பாளர்களுக்கு தலா ரூ.4 கோடி கொடுத்த சேகர் ரெட்டி: ஷாக் ரிப்போர்ட் கொடுக்கும் ராமதாஸ்

சேகர் ரெட்டி சட்டப்பேரவைத் தேர்தலின் போது 197 வேட்பாளர்களுக்கு தலா ரூ.4 கோடி வீதம் ...

Widgets Magazine Widgets Magazine