கருத்து வேறுபாட்டால் முட்டிக்கிட்டு நிற்கும் தினகரன், எடப்பாடி பழனிச்சாமி?: அடுத்த பஞ்சாயத்த எப்ப கூட்டுவாங்களோ!

கருத்து வேறுபாட்டால் முட்டிக்கிட்டு நிற்கும் தினகரன், எடப்பாடி பழனிச்சாமி?: அடுத்த பஞ்சாயத்த எப்ப கூட்டுவாங்களோ!


Caston| Last Updated: செவ்வாய், 21 மார்ச் 2017 (15:59 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மோதல்போக்கு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் அரசல் புரசலாக பேசப்படுகிறது.

 
 
இதனால் சசிகலாவுக்கும், ஓபிஎஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது போல, தினகரனுக்கும், எடப்பாடி பழனிச்சமிக்கும் இடையே ஏற்பட்டுவிடுமோ என பேசப்படுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிடுவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
 
தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதை, சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல அதிமுகவினர் விரும்பவில்லை. ஆனால் தினகரன் விடாப்பிடியாக போட்டியிட்டே தீருவேன் என தன்னிச்சையாக செயல்படுவதாக கூறப்படுகிறது.
 
ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து தினகரன் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, இந்த நேரத்துல நீங்க நிற்க வேண்டாம் என கூறியுள்ளார்.
 
ஏன் உங்களுக்கு போட்டியா வந்துடுவேன்னு பயமான்னு எடப்பாடியிடம் தினகரன் கேட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தனது நெருக்கமானவர்களிடம் கூறியதாக அதிமுக வட்டாரத்தில் ஒரு தகவல் உலா வருகிறது. கட்சியோட நல்லதுக்கு சொன்னா தினகரன் அத காதுகொடுத்துக்கூட கேட்கமாட்டீங்குறாரு என வெளிப்படையாகவே எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவதாக பேசப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :