Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அமைச்சர் தங்கமணி; தளவாய் சுந்தரம் இடையே வாக்குவாதம்: சசிகலா அணியில் பிளவு?

அமைச்சர் தங்கமணி; தளவாய் சுந்தரம் இடையே வாக்குவாதம்: சசிகலா அணியில் பிளவு?


Caston| Last Modified சனி, 15 ஏப்ரல் 2017 (17:55 IST)
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணிக்கும் முன்னாள் அமைச்சரும் தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான தளவாய் சுந்தரத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தங்கமணி காட்டமாக தளவாய் சுந்தரத்தை விமர்சித்ததாக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

 
 
டிடிவி தினகரன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஜெயலலிதா இருக்கும் போது கட்சியில் ஓரம்கட்டி வைக்கப்பட்டார். ஜெயலலிதா இறந்த பின்னர் தினகரனால் கட்சியில் முன்னிறுத்தப்பட்டார்.
 
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரநிதிநியாக தினகரன் ஆதரவுடன் நியமிக்கப்பட்டார். தினகரனின் வலது கையாக செயல்பட்டு வருகிறார் தளாவய் சுந்தரம். இதனால் அமைச்சர்களுக்கே உத்தரவிடுகிறார். இதனால் பல அமைச்சர்களுக்கு தளவாய் சுந்தரத்தின்  அராஜக போக்கு பிடிக்கவில்லை.
 
தளவாய் சுந்தரம் பல அமைச்சர்களை தினகரனிடம் போட்டு கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதனால் தளவாய் சுந்தரத்தால் கட்சியில் ஒருவித குழப்பம் நிலவியே வந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின் போதும் அராஜகமாக நடந்துகொண்டதாக தளவாய் சுந்தரம் மீது வருமான வரித்துறை காவல்துறையிடம் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அதிமுக அம்மா அணியில் அமைச்சர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் மாற்றம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இது தொடர்பாக இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.
 
அப்போது அமைச்சர் ஜெயகுமார் மாற்றம் தொடர்பாக அமைச்சர் தங்கமணிக்கும், தளவாய் சுந்தரத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது தளவாய் சுந்தரத்தை பார்த்து அமைச்சர் தங்கமணி, உங்கள் மாவட்டத்தை நாசம் செய்து விட்டீர்கள். இப்போது கட்சியை நாசம் செய்ய வந்திருக்கிங்களா என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :