Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிக்காதடா, அழிஞ்சுபோயிடுவடா: தீபா, தீபக் நேருக்கு நேர் மோதல்!

நடிக்காதடா, அழிஞ்சுபோயிடுவடா: தீபா, தீபக் நேருக்கு நேர் மோதல்!

ஞாயிறு, 11 ஜூன் 2017 (15:39 IST)

Widgets Magazine

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மீண்டும் தனது கணவர் மாதவனுடன் போய்ஸ் கார்டன் வந்து தனது தம்பி தீபக்குடன் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.


 
 
இன்று காலை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு அவரது அண்ணன் மகள் தீபா சென்றார். அவரது தம்பி தீபக்கின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு சென்றுள்ளார். ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செலுத்து அழைத்ததாக கூறப்படுகிறது.
 
ஆனால் தீபா அங்கு தடுக்கப்பட்டதாகவும், உள்ளே உள்ள பாதுகாவலர்களால் தான் அடித்து துறத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தீபக் சசிகலாவுடன் சேர்ந்து இந்த சதி செயலில் ஈடுபட்டதாக தீபா கூறினார்.
 
தனது அத்தையுமான ஜெயலலிதாவை தமது சகோதரர் தீபக்கும் சசிகலாவும் சேர்ந்து பணத்துக்காக கொன்றுவிட்டதாக ஒரே போடாக போட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் பிற்பகலில் மீண்டும் தீபா போயஸ் கார்டன் சென்று தீபக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
அப்போது, நடிக்காதடா தீபக், அழிஞ்சுபோயிடுவடா, ஏமாத்ததடா, மாதவனுக்கு ஏதாவது ஆனால் நீதான் பொறுப்பு. உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என சரமாரியாக சாடியதாக தகவல்கள் வருகின்றன. தீபாவை போலீசார் சமாதானம் செய்தும் தீபா விடாப்பிடியாக போஸ்கார்டனில் தீபக்குடன் மோதலில் ஈடுபட்டதால் போயஸ்கார்டனில் மீண்டும் பரபரப்பு ஏறபட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர்: வலைவீசி தேடும் போலீஸ்!

கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் 6-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகளை தன்னுடைய ஃபோனில் ...

news

சசிகலாவை புறம்போக்கு என விளாசிய தீபா: ஆவேசத்தில் சசி ஆதரவாளர்கள்!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்ததை அடுத்து அவர் அங்கு ...

news

ஜெயலலிதாவை கொன்றது சசிகலாவும் எனது தம்பியும்: தீபா திடீர் ஆவேசம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பலரும் கூறி ...

news

வருமான வரிக்கும் பான் எண்ணிற்கும் கட்டாயமாக்கப்படும் ஆதார் எண்!!

வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், பான் அட்டை விண்ணப்பிப்பதற்கும் வரும் ஜூலை 1 ஆம் ...

Widgets Magazine Widgets Magazine